Home நாடு எம்எச்370 பற்றிய அவசர செய்தியாளர் சந்திப்பு – கடைசி நிமிடத்தில் இரத்து!

எம்எச்370 பற்றிய அவசர செய்தியாளர் சந்திப்பு – கடைசி நிமிடத்தில் இரத்து!

496
0
SHARE
Ad

MH370புத்ரா ஜெயா, ஜனவரி 29 – கடந்த வருடம் மார்ச் 8-ம் தேதி, 239 பயணிகளுடன் மாயமான எம்எச்370 விமானத்திற்கு என்ன ஆனது? என்று இது வரை எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத நிலையில், இன்று உள்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை (டிசிஏ) அவசர செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்திற்கு எம்எச்370 விமானப் பயணிகளின் உறவினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில், செய்தியாளர்கள் யாரும் கேள்விகள் கேட்க இயலாது என்றும், தனிப்பட்ட முறையில் கேள்விகளை நாளை மதியத்திற்குள் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்றும் சற்று நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த அதிகாரிகள், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த செய்தியாளர் சந்திப்பு இரத்து செய்யப்படுகின்றது என்று அறிவித்தனர்.