Home உலகம் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு!

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு!

482
0
SHARE
Ad

california earthquakeவாஷிங்டன், ஜனவரி 29 – அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக இந்த நில நடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு யுரேகாவிலிருந்து 40 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், 17.2 கி.மீ சுற்றளவிற்கு நிலநடுக்கத்தால் அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.

தொடக்கத்தில் 5.1 என்ற ரிக்டர் அளவிற்கு வலிமை குறைந்த அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், பின்னர் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த மிதமான நிலநடுக்கம் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.