Home நாடு மஇகா பிரச்சனை எல்லை மீறிப் போய்விடும் என்பதால் தலையிடுகிறோம் – மொய்தீன் யாசின்

மஇகா பிரச்சனை எல்லை மீறிப் போய்விடும் என்பதால் தலையிடுகிறோம் – மொய்தீன் யாசின்

529
0
SHARE
Ad

muhyiddin-yassin1கோலாலம்பூர், ஜனவரி 30 – மஇகா பிரச்சனை எல்லை மீறிப் போய்விடும் என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியான மஇகாவில் பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில், பிரச்சனையை தீர்க்க தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும், துணைப் பிரதமரும் முன்வந்திருக்கிறார்கள்.

“தற்போதுள்ள சூழ்நிலையில், நாம் தலையிடாவிட்டால் எல்லாம் எல்லை மீறிப் போய்விடும் எனத் தெரிகிறது. எனவே மஇகாவின் உயர்நிலைத் தலைவர்களை அழைத்துப் பேச இருக்கிறோம்”.

#TamilSchoolmychoice

“கூட்டணியின் மதிப்பைக் காப்பாற்றும் வகையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்க உள்ளோம். அனைத்தும் மஇகாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்படுத்தப்படும்,” என்றார் மொய்தீன்.

எத்தகைய முடிவையும் எடுப்பதற்கு முன்னர், மஇகாவின் சில உயர் பதவிகள் மற்றும் தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சங்கப்பதிவிலாகாவின் உத்தரவு குறித்து கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றார் துணைப் பிரதமர்.

“மஇகா தலைவர் இலக்கின்றிச் செயல்படுவதுபோல் தோன்றுகிறது. இதுகுறித்து விமர்சித்து, பிரச்சினை எல்லை மீறிப் போய்விட அனுமதிக்கப் போவதில்லை. எனினும் தற்போதைய சூழ்நிலையில் நடப்பது எதுவும் நன்றாக இல்லை,” என்று மொய்தீன்  மேலும் தெரிவித்தார்.