கோலாலம்பூர், ஜனவரி 30 – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.
நஜிப் தனது உரையில் தமிழ் மொழி குறித்தும், மலேசிய இந்தியர்கள் குறித்தும் நெகிழ்ச்சியூட்டும் படியாகப் பேசினார். நாட்டில் மலேசிய இந்தியர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருவதாக நஜிப் பெருமிதம் கொண்டார்.
அதேவேளையில், மலேசிய அரசாங்கமும் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
(மாநாட்டு சிறப்பிதழை டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு வழங்க பிரதமர் நஜிப் துன் ரசாக் பெற்றுக் கொண்டார்)
( மாநாட்டு மேடையிலேயே சிறப்பிதழை ஆர்வத்துடன் பார்வையிடும் பிரதமர் நஜிப்)
(பிரதமர் நஜிப் தனது உரையில், “மலேசிய இந்தியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அரசாங்கம் இந்தியர்களின் நலனுக்கு எல்லா விதங்களிலும் உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.)
(மாநாட்டில் மஇகா தேசிய உதவித்தலைவர் மற்று விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன், துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.)
(சூத்ரா ஆர்ட்ஸ் அறக்கட்டளை மாணவர்கள் வழங்கிய நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது)
(உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தனது உரையில், மாநாட்டின் அனைத்து செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டது என்று தெரிவித்தார்.)
(சிங்கப்பூர் நீதித்துறை மற்றும் கல்வி அமைச்சர் திருமதி இந்திராணி தமிழாராய்ச்சி மாநாடு குறித்து சிறப்புரையாற்றினார்)
(தேசிய வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் மற்றும் சத்யா ஆகிய இருவரும் இனிமையான தமிழில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தினர்)
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்