Home நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பழனி, சுப்ரா கலந்துகொள்ளவில்லை!

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: பழனி, சுப்ரா கலந்துகொள்ளவில்லை!

610
0
SHARE
Ad

9th INT1கோலாலம்பூர், ஜனவரி 30 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நஜிப் தலைமையில் இன்று நடைபெற்ற 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் துவக்க விழாவில், மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும், துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியமும் கலந்து கொள்ளவில்லை.

இரு தலைவர்களும் இன்று மஇகா விவகாரங்கள் தொடர்பாக பிரதமரை சந்திக்கவுள்ளதால், மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என அனைத்துத் தரப்பிலும் எதிர்பார்ப்புகள் நிலவியது. என்றாலும், பழனிவேலும், சுப்ராவும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Saravanan

#TamilSchoolmychoice

மஇகா சார்பில் தேசிய உதவித் தலைவர் டத்தோ சரவணன், துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் ஆகியோரோடு, அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

Kamalanathan

பிரதமரே கலந்து கொள்ளும் உலகளாவிய முக்கிய தமிழ் மாநாட்டில் பழனிவேலு கலந்து கொள்ளாதது குறித்து பழனிவேலு தரப்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரா ஏன் கலந்து கொள்ளவில்லை என அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, சட்டத்துறையில் பட்டம் பெற்ற   அவரது மகன் தத்வரூபன் இன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அனுமதிக்கப்படுவதால், முக்கியமான அந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, சுப்ரா சென்றுள்ளதாக மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.