புதுடெல்லி, ஜனவரி 30 – இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 68-வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், மோடி உள்பட பல அரசியல் தகைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் டெல்லி ராஜ்காட்டில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் காந்தி படத்துக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மேயர் துரைசாமி ஆகியோர் காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அரசு அதிகாரிகளும் மகாத்மா காந்தி படத்துக்கு மரியாதை செலுத்தினர். சர்வோதயா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். மகாத்மா காந்தியின் 69-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கும் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா மற்றும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காந்தியின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.