கோலாலம்பூர், பிப்ரவரி 4 – கோலாலம்பூரில் மூன்றாவது முறையாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நான்கு நாட்கள் நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றது.
மாநாட்டு நிறைவு விழாவில் உரையாற்றிய டாக்டர் டி.மாரிமுத்து
இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நடப்புத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் டி.மாரிமுத்து,
அடுத்த 10வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அமெரிக்காவின் சிக்காகோ நகரில் நடத்துவதற்கு தங்களுக்கு விண்ணப்பம் கிடைத்திருப்பதாகவும், வேறு விண்ணப்பங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்பதால் அடுத்த மாநாட்டை சிக்காகோவிலேயே நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார்.
2017ஆம் ஆண்டில் அடுத்த மாநாடு நடைபெறக் கூடும் என்றும் மாரிமுத்து அறிவித்தார்.