Home இந்தியா முன்னாள் தமிழக திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் தற்கொலை!

முன்னாள் தமிழக திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி மகன் தற்கொலை!

1698
0
SHARE
Ad

சென்னை, பிப்ரவரி 8 – முன்னாள் தமிழக அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகன் இனியவன் (படம்) நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் இனியவன் (வயது 26). இவருக்கு திருமணமாகி பிரசன்யா (23) என்ற மனைவியும், இனியா (1) என்ற மகளும் உள்ளனர்.

KPP Samy Son Iniyavan (died)

#TamilSchoolmychoice

தற்போது கே.பி.பி.சாமி தி.மு.க. மீனவர் அணி மாநிலச்செயலாளராக உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக அவர் அங்கு சென்று இருந்தார்.

தற்கொலை

வீட்டில் இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு இனியவன் வீட்டின் மாடியில் தூங்கச்சென்றார். பிரசன்யா, குழந்தையுடன் வீட்டின் கீழ் பகுதியில் தூங்கிக்கொண்டு இருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் இனியவன் கீழே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பிரசன்யா இனியவனின் அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, இனியவன் மின் விசிறியில் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார் என தமிழக பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

பின்னர் காவல்துறையினர் வந்து பிணத்தை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இனியவன் தற்கொலை குறித்து கே.பி.பி.சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை திரும்பினார்.

காரணம் என்ன?

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இனியவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேறு காரணம் எதுவும் உண்டா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.