Home அவசியம் படிக்க வேண்டியவை 14வது பொதுத் தேர்தல்: 2 மாதங்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் கெராக்கான்!

14வது பொதுத் தேர்தல்: 2 மாதங்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் கெராக்கான்!

703
0
SHARE
Ad

அலோர்ஸ்டார், பிப்ரவரி 8 – அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 2 மாதங்களில் அறிவிக்க உள்ளது கெராக்கான் கட்சி. இதற்கு சிலர் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், சில பிரச்சினைகள் எழுந்தாலும், வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர் டத்தோ மா சியூ கியோங் (படம்) சனிக்கிழமை தெரிவித்தார்.

கட்சி முன்னோக்கிச் செல்ல வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பது அவசியமாகிறது என்றார் அவர்.

mahsiewkeong (1)“தேர்தல் நடக்க சில ஆண்டுகள் இருக்கும்போதே வேட்பாளர்களை அறிவிக்கிறோம். இதற்கு முன் எந்த அரசியல் கட்சியும் இப்படிச் செய்ததில்லை. ஆனால் புதிய விஷயங்களை நாம் தைரியமாகச் செய்ய வேண்டும். அதனால் எழக்கூடிய பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்” என்று சியூ கியோங் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“வேட்பாளர்கள் குறித்து அதிருப்தி எழுவது தவிர்க்க முடியாதது. தேர்தலுக்கு ஒரு மாதம் அல்லது ஒராண்டு என எப்போது வேட்பாளர்களை அறிவித்தாலும் அதிருப்தி எழவே செய்யும். எனவே வேட்பாளர்களை இப்போதே அறிவித்தால், அவர்கள் களப்பணியாற்றத் தொடங்குவர். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்வர்,” என்று மா சியூ கியோங் மேலும் கூறினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் 2018இல் நடைபெற வேண்டும். எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய முன்னணிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்த கெராக்கான், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஒரு வியூகமாக, பொதுத் தேர்தல் வேட்பாளர்களை இப்போதே அறிவித்து, அவர்களை தத்தம் தொகுதிகளில் வாக்காளர்களோடு அறிமுகப்படுத்திக் கொண்டு பணியாற்றும் பணிகளில் அவர்களை ஈடுபடுத்த முனைந்துள்ளது.