Home நாடு லாகாட் டத்து துப்பாக்கி சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்

லாகாட் டத்து துப்பாக்கி சண்டையில் பலர் கொல்லப்பட்டனர்

705
0
SHARE
Ad

lahad-datu-sliderசபா, மார்ச் 1 – கடந்த மூன்று வாரங்களாகத்  தொடர்ந்து கொண்டிருக்கும் சுலு சுல்தான் ஆட்களின் ஊடுருவல் முயற்சியை முறியடிக்கும் விதமாக மலேசியப்  படையினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பலர் கொல்லப்பட்டதாக பிலிப்பினோ ஊடகங்கள் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன.

பிலிப்பினோ ஊடகங்களின் கூற்றுப்படி மலேசிய படையினரே முதலில் துப்பாக்கிச் சண்டையை தொடங்கியதாக தெரிகிறது.

தினசரி வானொலி ஒன்றுக்கு சுலு சுல்தான் என்று தன்னை கூறிக் கொள்ளும் ஜமுலால் கிராமின் உறவினர்கள் அளித்த பேட்டியில் சுலு சுல்தானும் அவரது சகோதரர் அசிமுடி கிராமும் லாகாட் டத்துவில் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கு தலைமை வகித்ததாக தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

சீனா பிரெஸ் நாளிதழ் காட்டிய மேற்கோளின் படி இந்த துப்பாக்கிச் சண்டையில் ஊடுருவல் கும்பலைச் சேர்ந்த இருவர் இறந்ததாகவும், மலேசிய ஆயுத படையினரில் மூன்று பேர் படு காயம் அடைந்ததாகவும் சில செய்திகளை அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு பிலிப்பினோ ஊடகமான “பிலிப்பின் டேய்லி இன்கொயரர்” வெளியிட்ட அறிக்கையின் படி சபாவை மையமாகக் கொண்ட வானொலி நிலையத்தைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கம்போங் தண்டுவாவில் அமைந்துள்ள பெல்டா-17 என்ற இடத்திற்கு அருகே ஆயுதம் ஏந்திய கும்பல் மலேசிய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சரியாக காலை 10 மணியளவில் அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், சபா வானொலி நிலையம் தாங்கள் இச்சம்பவம் குறித்து மலேசிய அதிகாரிகளிடமிருந்து கருத்துகளைப் பெற எடுத்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை என்று தெரிவித்தது.