நேற்று முன்தினம் இரவு சபா மாநிலம் செம்பூர்ணா மாவட்டத்தில் கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுல் எனுமிடத்தில் ஆயுத கும்பல் நடத்திய தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர்.
அப்போது நடந்த சண்டையின் போது குறைந்தது நான்கு மலேசியர்கள் பிணைபிடிக்கப்பட்டனர் என்று சுலு சுல்தானின் பேச்சாளர் தெரிவித்தார்.
மணிலாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது அவ்வாறு கூறியதாக பிலிப்பினோ தனியார் வானொலி தெரிவித்தது.
செம்பூர்ணாவில் தாக்குதல் நடத்திய ஆயுதக் கும்பலுக்கும் சுலு சுல்தான் தரப்புக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Comments