Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் 2014 ல் சேவையைத் துவங்குகிறது

சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் 2014 ல் சேவையைத் துவங்குகிறது

759
0
SHARE
Ad

download

பெய்ஜிங், மார்ச் 4- சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் C 919 தனது முதல் சேவையை 2014 ல் துவங்கும் என்று அதன் தலைமை வடிவமைப்பாளர் சின்குவா செய்தி நிறுவனதிற்கு தெரிவித்தார்.

C 919 என்ற ஜம்போ ஜெட் ரக விமானத்தின் அனைத்து வடிவமைப்புப் பணிகளும் முடிந்து மற்ற முக்கிய உபகரணங்களின் சோதனைகள் 2013 ல்நடைபெற்று வருவதாக அதன் தலைமை வடிவமைப்பாளரும், (COMAC – Commercial Aircraft Corporation of China) என்ற அந்நிறுவனத்தின் பொது மேலாளருமான வு ஹுவாங் ஹுய் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்நிறுவனம் அனுபவமின்மை, தொழில்நுட்ப பற்றாக்குறை, கடுமையான போட்டி போன்ற பல தடைகளைக் கடந்து 2012 ல் பல முன்னேற்றங்களை அடைந்ததாகத் தெரிவித்தார்.

இந்நிறுவனம் 2013 ல் தொடர் ஆய்வுப்பணிகளையும், 40 சுரங்கங்களில் காற்று பரிசோதனைகளையும்  மேற்கொள்ளவிருக்கிறது என்று நேற்று பெய்ஜிங்கில் நடைபெற்ற அரசியல் ஆலோசனை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்த வு ஹூவாங்  செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.