பெட்டாலிங் ஜெயா, மார்ச்.4- எதிர்வரும் 13.3.2012 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் பிற்பகல் 3 முதல் 7 மணி வரை இந்துக்கள் தொடர்பான பிர்ச்சனைகளை விவாதிக்க கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் பொருளாதாரம், சமயம், அரசியல், கல்வி மற்றும் மலேசிய இந்துக்களைப் பாதிக்கும் சமூக பிரச்சினைகள் பற்றி விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு “மலேசிய இந்துக்கள் ஏஜண்டா டாஸ்க் ஃபோர்ஸ்” (Hindu Agenda Task Force) என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த அமைப்பில் இந்து சமயம் சார்ந்த சுமார் 72 அரசு சார்பற்ற அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
இந்த விவாத கூட்டத்தில் தமது கோரிக்கைகளை அவர்கள் முன் வைக்கின்றனர்.
மலேசிய இந்துக்கள் மேம்பாட்டுக் கழக அமைப்பு, தனியார் மற்றும் அரசாங்க பல்கலைகழகத்திற்கான நுழைவு, மற்றும் கோயில் உடைப்பு போன்ற இந்தியர்கள் தொடர்பான பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்படும்.
குழந்தைகளுடைய பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் அனுமதி இல்லாமல் அவர்களை மதம் மாற்றம் செய்யக்கூடாது என்று அரசியலமைப்பை திருத்தி எழுத வேண்டும் எனவும் இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலந்து கொள்பவர்களுக்கு தன்முனைப்புத் தூண்டல் பயிற்சிகளும் வழங்கப்படும் என இந்த அமைப்பின் பிரதிநிதி வி.கே. ரெகு கூறினார்.
இந்த நிகழ்வின் அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய அறிக்கை ஒன்றை தேசிய முன்னணிக்கும் மற்றும் மக்கள் கூட்டணிக்கும் அனுப்பப்படும் என மேலும் கூறினார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே கோரிக்கைகளை நாங்கள் தேசிய முன்னணிக்கும் மற்றும் பக்கத்தான் கட்சிக்கும் முன் வைத்தோம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கவில்லை” என அவர் கூறினார்.