Home உலகம் 25 ஆண்டுகளில் மணிலா இறந்த நகரமாகிடும்: பிலிப்பைன்ஸ் அதிபர்

25 ஆண்டுகளில் மணிலா இறந்த நகரமாகிடும்: பிலிப்பைன்ஸ் அதிபர்

1101
0
SHARE
Ad

Rodrigo duterte-philippines-மணிலா – இன்னும் 25 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலா ‘இறந்த நகரமாக’ மாறிவிடும் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூடெர்டே கூறியிருக்கிறார்.

கடுமையான போக்குவரத்து நெரிசல் தான் அதற்குக் காரணம் என்று குறிப்பிட்டிருக்கும் டூடெர்டே, இதனைக் கருத்தில் கொண்டு மணிலாவுக்கு வெளியே இருக்கும் பம்பாங்கா போன்ற நகரங்களை மேம்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னும் சில ஆண்டுகளில் மணிலா முதலீடு செய்வதற்குத் தகுதியான நகரமாக இருக்காது என்றும் டூடெர்டே தெரிவித்திருக்கிறார்.