Home இந்தியா ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்!

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டார்!

1014
0
SHARE
Ad

election_commission_of_indiaசென்னை – டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான வேலுச்சாமி இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, மற்ற விவகாரங்கள் குறித்து பரவலாக எழுந்த புகார்கள், நடுநிலையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றுக்கு இடையில் தேர்தல் அதிகாரி மாற்றப்பட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் அதிகாரி மாற்றப்பட வேண்டுமென அறைகூவல் விடுத்து வந்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் புதிய தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.