தாங்கள் கைது செய்யும் மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்கின்றனர். அன்பர் மாகாணத்தில் அல்–பக்தாதி உள்ளிட்ட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
அவர்களில் போலீசாரும், ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்த தகவலை அல்–பக்தாதி நகர போலீஸ் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளார். எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.