Home இந்தியா நடிகைக்கு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ராம் ஜெத்மலானி!

நடிகைக்கு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ராம் ஜெத்மலானி!

433
0
SHARE
Ad

18-Jethmalani-Leena-kissமும்பை, பிப்ரவரி 20 – பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி (91), விருது வழங்கும் விழா ஒன்றில் முன்னாள் நடிகை ஒருவருக்கு உதட்டு முத்தம் கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த திங்கட்கிழமை மும்பையில் ஹம் லோக் விருதுகள் என்ற பெயரில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ராம் ஜெத்மலானி, இந்தி பாடகர் கிஷோர் குமாரின் மனைவி லீனா சந்தாவர்கர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது லீனா சந்தாவர்கரை பார்த்த ராம் ஜெத்மலானி அவரை விழாவிற்கு வரவேற்கும் விதமாக கட்டி அணைத்து உதட்டு முத்தம் கொடுத்துள்ளார். அடுத்தவரின் மனைவிக்கு ராம் ஜெத்மலானி முத்தம் கொடுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல்,  கடந்த ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றின் போது இந்தி நடிகர் தர்மேந்திராவுக்கும் அவர் உதட்டு முத்தம் கொடுத்துள்ளளார்.

#TamilSchoolmychoice

இவ்வாறான சர்ச்சைகளில் அவர் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற டெல்லி தேர்தலின் போது, பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியை விட அவருக்கு அருகில் இருக்கும் ஷாசியா இல்மி அழகானவர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.