Home இந்தியா ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்

ஸ்டாலின் மணி விழா கொண்டாட்டம்: உண்டியல் வசூல் அமோகம்

743
0
SHARE
Ad

mk-stalinசென்னை, மார்ச் 2- தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழாவையொட்டி, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், தி.மு.க.,வினர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரிய உண்டியலில், தேர்தல் நிதி அமோகமாக வசூலானது.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மணி விழா, சென்னையில் உள்ள, அடையாறு ஓட்டலில், நேற்று நடந்தது. பட்டு வேட்டி, சட்டையுடன் ஸ்டாலினும், பட்டு புடவை அணிந்து, அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் ஸ்டாலினும், துர்காவும் மாலை மாற்றி கொண்டனர். பின், துர்கா கழுத்தில், ஸ்டாலின் தாலி கட்டினார்.

இருவரும் கருணாநிதி காலில் விழுந்து, ஆசி பெற்றனர். கருணாநிதி அவர்களுக்கு, அட்சதை போட்டு ஆசி வழங்கினார். பின்னர் ஸ்டாலின் கேக் வெட்டினார். விழாவில் அன்பழகன், ராஜாத்தி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். காலை, 10:00 மணிக்கு, ஸ்டாலின், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திற்கு வந்தார்.

#TamilSchoolmychoice

அங்கு தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த மணி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஸ்டாலின் வயது குறிக்கும் வகையில், 60 கிலோ எடையுள்ள கேக்கை, தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் வெட்டினார். தொண்டர்கள் நீண்ட வரிசைகளில் நின்று, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் கூட்டத்தை சரியான முறையில் கட்டுப்படுத்தாத காரணத்தால், தள்ளு முள்ளு சம்பவம் அரங்கேறியது.

அதில், முன்னாள் அமைச்சர்கள் சிலர் கீழே விழுந்து, எழுந்து சென்றனர். பூங்கொத்துகள், ஆளுயுர மாலைகள், சால்வைகள், பழத்தட்டுகள், ரூபாய் நோட்டு மாலைகள், “லவ் பேர்ட்ஸ்’ போன்ற பரிசு பொருட்களை, ஸ்டாலினிடம், தி.மு.க.,வினர் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். மணிவிழாவையொட்டி, மேடை அருகில் பெரிய உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில், தொண்டர்கள் தேர்தல் நிதியாக பணத்தை செலுத்தி விட்டு சென்றனர். உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் சேர்ந்தது.