Home நாடு இன்றைய அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் ‘இணைமதியம்’ பற்றிய நேர்காணல்!

இன்றைய அஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சியில் ‘இணைமதியம்’ பற்றிய நேர்காணல்!

801
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், மார்ச் 11 – எதிர்வரும் மார்ச் 14-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள ‘இணைமதியம்’ நிகழ்ச்சி குறித்து, ‘முரசு அஞ்சல்’, ‘செல்லினம்’, ‘செல்லியல்’ செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்துநெடுமாறனும், செல்லியலின் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசனும், இன்று காலை அஸ்ட்ரோ ‘விழுதுகள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சி மீண்டும் இன்று இரவு 8.30 மணியளவில், அஸ்ட்ரோ வானவில் (201) அலைவரிசை மற்றும் விண்மீன் எச்டி (231) அலைவரிசையில் மறுஒளிபரப்பு செய்யப்படும்.

“இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில், வரும் சனிக்கிழமை மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice