Home உலகம் மியான்மரில் படகு விபத்து – 50-க்கும் மேற்பட்டோர் பலி!

மியான்மரில் படகு விபத்து – 50-க்கும் மேற்பட்டோர் பலி!

535
0
SHARE
Ad

abc_c_fiona_stewart_2-900x450

யாங்கூன், மார்ச் 16 – மியான்மரின் கடற்கரை நகரமான டாங்காக்கில் இருந்து சிட்வே நோக்கி பயணித்த படகு ஒன்று மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

டாங்காக்கில் இருந்து ராகினே மாநில தலைநகரமான சிட்வே நோக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் மோசமான வானிலை காரணமாக தத்தளித்தது. அப்பொழுது வானிலை மேலும் மோசமாகி, ராட்சத அலைகள் திடீரென தாக்கின. இதனால் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

#TamilSchoolmychoice

தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று கடலில் மூழ்கிய 167 பேரை உயிருடன் மீட்டனர். எனினும், 50-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கிப்போகினர். இதில் சுமார் 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது. அளவுக்கு அதிகமான அளவில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் படகு விபத்து அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் சிறிய, பழமையான மற்றும் கூட்டநெரிசல் மிகுந்த படகுகளில் பயணம் செய்ய விரும்புவதே இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.