எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்தாலும், லீமா 2015 கண்காட்சி தடையின்றி நடைபெறும் என்பதையும் அறிவித்தார்.
“விமானிகள் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி. அவர்கள் இன்னமும் அதே துணிச்சலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் மன உறுதி கொண்டவர்கள்” என்று நேற்று லங்காவி மருத்துவமனையில் விமானிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் ஹிஷாமுடின் கூறினார்.
மேலும், விபத்து நடந்தவுடன் உடனடியாக அப்பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்தும் ஹிஷாமுடின் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
லங்காவி அனைத்துலக கப்பல் மற்றும் வான் படை கண்காட்சி 2015 நாளை தொடங்கவுள்ளது. அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானங்கள் இரண்டு, நேற்று ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளாகின.
எனினும், இரண்டு இருக்கைகள் கொண்ட அந்த விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும், விமானத்தில் இருந்து பாராசூட் மூலமாக தரையில் குதித்து காயங்களுடன் உயிர் தப்பினர்.