Home நாடு லீமா கண்காட்சி: இந்தோனேசிய வான்படைக் குழு விலகல்!

லீமா கண்காட்சி: இந்தோனேசிய வான்படைக் குழு விலகல்!

568
0
SHARE
Ad

?????????????????????????????????????புலாவ் லங்காவி, மார்ச் 17 – லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான் படை கண்காட்சியில் (லீமா 2015) பங்கேற்கவில்லை என இந்தோனேசிய விமானப்படையின் ஜூபிடர் வான் சாகசக்குழு அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று மேற்கொண்ட ஒத்திகையின்போது இக்குழுவைச் சேர்ந்த இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதையடுத்து தனது மூத்த அதிகாரி சாகச நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக இக்குழுவின் அதிகாரி மார்ஷல் இந்திரா யாடி தெரிவித்தார்.

“விபத்துக்கள் எங்கு, எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும். இந்த விபத்து வானில் பறப்பதற்கான எங்களது தைரியத்தை குறைத்துவிடவில்லை. விபத்துக்குள்ளான எங்கள் விமானம் தரை இறங்கிய வீட்டின் உரிமையாளருக்காக நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம். எங்களது கட்டுப்பாட்டையும் மீறி இவ்வாறு நடந்துவிட்டது,” என்று லங்காவி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா யாடி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒத்திகையின்போது, விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியுடன் நுண்பார்வையாளராக இந்தோனேசிய விமானப்படை சார்பாக உடன் சென்றிருந்தார் இந்திரா யாடி.

இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த லெஃப்டினென் கர்னல் ஹர்தானோ (44 வயது), மேஜர் ஸ்ரீ ரஹார்ஜோ (37 வயது), மேஜர் முஹைடி சியாரிப் (37 வயது) மற்றும் இந்திரா யாடி ஆகிய நால்வரும் திங்கட்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர் என லங்காவி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மன்சோர் இஸ்மாயில் கூறினார்.