Home நாடு சபா, சரவாக்கை பிரிக்கும் நோக்கில் இணையதளம்: 4 பேர் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு

சபா, சரவாக்கை பிரிக்கும் நோக்கில் இணையதளம்: 4 பேர் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு

528
0
SHARE
Ad

Crime-Pixகோத்தாகினபாலு, மார்ச் 17 – கூட்டரசு அமைப்பில் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்த புகாரின் பேரில் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் 4 பேர் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

அஸ்ரி சிட்டு (25), ஜெம்மி லிகு மார்குஸ் சிட்டு (32), எரிக் ஜாக் வில்லியம் (29) மற்றும் ஜோஸஃப் கொலிஸ் (29) ஆகிய 4 போராளிகளும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.4 பேர் மீதும் தேச நிந்தனைச் சட்டம், பிரிவு எண் 4(2)ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

‘மலேசியாவை விட்டு சபா, சரவாக்கை வெளியேற்றுக’ என்ற பிரிவினைவாத கருத்துக்களைக் கொண்ட இணையதளத்துடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்த புகாரின் பேரில் இந்நால்வரும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி துவாரான் தாமு திடலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

நீதிமன்ற விசாரணையின்போது 4 பேரும் 20 ஆயிரம் வெள்ளி மற்றும் உள்ளூர் நபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் நால்வரும் தங்களது கடப்பிதழை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நால்வருக்கும் தொடக்கத்தில் சட்ட ஆலோசகராக செயல்பட்ட முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ யோங் டெக் லீயும் விசாரணையின்போது நீதிமன்றத்தில் இருந்தார்.