Home நாடு லீமா 2015: விமானம் விழுந்து சேதமடைந்த வீட்டிற்கு 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி!

லீமா 2015: விமானம் விழுந்து சேதமடைந்த வீட்டிற்கு 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி!

555
0
SHARE
Ad

woongbi160315லங்காவி, மார்ச் 18 – இந்தோனேசிய விமானப் படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்ததால் லங்காவியில் சேதமடைந்த வீட்டை சீரமைக்கும் பணிக்கு இந்தோனேசிய மக்கள் ஆலோசனை மன்றம் 40 ஆயிரம் ரிங்கிட் நிதி அளித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அன்று லீமா கடல்சார் மற்றும் வான்படை கண்காட்சியில் பங்கேற்பதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய விமானப் படைக்கு சொந்தமான இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டன.

பின்னர், தீப்பிடித்த நிலையில் அதில் ஒரு விமானம் அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு பலத்த சேதத்திற்கு உள்ளானது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அந்த வீட்டின் மறுநிர்மாணப் பணிகளுக்காக 40 ஆயிரம் வெள்ளியை மக்கள் ஆலோசனை மன்றத்தின் பிரதிநிதி ஓஸ்மான் சப்தா, சேதமடைந்த வீட்டின் உரிமையாளரை பிரதிநிதித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் வழங்கினார்.

“மக்கள் ஆலோசனை மன்றத்தின் பங்களிப்பை தற்போது ஒப்படைத்துள்ளேன். வீட்டை மறுசீரமைப்பது தொடர்பில் அதன் உரிமையாளரின் சுமையை இது ஓரளவு குறைக்கும் என நம்புகிறேன்,” என்றார் ஓஸ்மான் சப்தா.

இந்த நிதி உதவிக்காக நன்றி தெரிவித்த துன் மகாதீர், வீட்டின் உதவியாளருக்கு இது நிச்சயம் கைகொடுக்கும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த விபத்தையடுத்து இந்தோனேசிய விமானப்படையின் ஜூபிடர் குழு லீமா கண்காட்சியில் பங்கேற்கவில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.