Home நாடு பழனிவேலுடன் நேரடி விவாதமா? மறுத்தார் சுப்ரா!

பழனிவேலுடன் நேரடி விவாதமா? மறுத்தார் சுப்ரா!

860
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 18 – மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுடன் நேரடியாக விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக வெளியான தகவலை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் சுப்ரமணியம் மறுத்துள்ளார்.

Datuk Seri Dr S.Subramaniamபழனிவேலை நேரடி விவாதத்திற்கு தாம் அழைத்ததாக வாட்ஸ் அப் நட்பு ஊடகம் மூலம் தகவல் பரவிய நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், மஇகா உட்கட்சிப் பிரச்சினைகளை தேசிய முன்னணியின் உதவியுடன் ஒரு குடும்பமாக இருந்து தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நேரடியாக விவாதம் நடத்த இது ஒன்றும் தேசிய முன்னணிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையேயான பிரச்சினை அல்ல. இது ஒரு குடும்ப விவகாரம். எனவே குடும்பப் பிரச்சினையாக கருதியே இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார் டாக்டர் சுப்ரமணியம்.

மஇகா மறுதேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மஇகாவில் உள்ள போலி கிளைகளை களையெடுக்கும் பணியில் சங்கப் பதிவிலாகா ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் ஆகும் என்றும் கூறினார்.