Home படிக்க வேண்டும் 3 லீமா கண்காட்சி 2015: மலேசியாவின் புதிய விமான சேவை ‘ஃப்ளைமோஜோ’ அறிமுகம்!

லீமா கண்காட்சி 2015: மலேசியாவின் புதிய விமான சேவை ‘ஃப்ளைமோஜோ’ அறிமுகம்!

574
0
SHARE
Ad

flymojo-600x360லங்காவி, மார்ச் 17 – லங்காவியில் இன்று நடைபெற்ற அனைத்துலக கப்பல் மற்றும் வான் படை கண்காட்சி (லீமா) 2015-ல், மலேசியாவிற்குச் சொந்தமான புதிய விமானம், ‘ஃப்ளைமோஜோ’ அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பறக்கவுள்ள இந்த விமானம், ஜோகூர் பாருவில் இருந்து கோத்தா கினபாலு இடையிலான பயண சேவையை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, பாம்பார்டியர் வர்த்தக விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளைமோஜோ நிறுவனம், 20 சிஎஸ்100 இரக விமானங்களை வாங்கவுள்ளது. எதிர்காலத்தில் கூடுதலாக 20 விமானங்கள் வாங்கும் படியும் அந்த ஒப்பந்தத்தில் விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்நாட்டில், சிஎஸ்100 இரக விமானங்களை இயக்கும் முதல் நிறுவனமாக ஃப்ளைமோஜோ விளங்கவுள்ளது.

சிஎஸ் 100 இரக விமானங்களின் விலைப் பட்டியல் படி, தோராயமாக 1.47 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (5.44 பில்லியன் ரிங்கிட்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை, விமானத்தின் அனைத்து வசதிகளையும் ஃப்ளைமோஜோ தேர்வு செய்யுமானால் அதன் செலவு 2.94 அமெரிக்க டாலரை அடையும் என்று கூறப்படுகின்றது.

இன்று லங்காவியில் நடைபெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வில், ஃப்ளைமோஜோ நிறுவனத்தின் சார்பாக நிர்வாக இயக்குநர் டத்தோ ஜனார்த்தனன் கோபால கிருஷ்ணனும், பாம்பார்டியர் நிறுவனத்தின் ஆசியா – பசிபிக் பிரதேச விற்பனைப் பிரிவின் துணைத்தலைவர் ஃபிராங்க் பைஸ்ட்ரோச்சியும் கலந்து கொண்டனர்.