Home கலை உலகம் தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் காலமானார்!

698
0
SHARE
Ad

dericter amirjohnசென்னை, மார்ச் 17 – தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர்ஜான் இன்று காலை காலமானார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் சிஷ்யரான 70 வயதாகும் அமீர்ஜான் இன்று காலை சென்னையில் திடீரென காலமானார்.

இவர் பூவிலங்கு, உன்னை சொல்லி குற்றமில்லை, சிவா, தர்ம பத்தினி, நட்பு, புதியவன், வணக்கம் வாத்தியாரே உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநர் அமீர்ஜானின் இறுதிச் சடங்கு சென்னையில் நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இயக்குனர் அமீர்ஜான் உடலுக்கு நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice