Home Featured கலையுலகம் பழம்பெரும் பாடகி பி.சுசிலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை!

பழம்பெரும் பாடகி பி.சுசிலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை!

1180
0
SHARE
Ad

P.Suzilaசென்னை – இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற பாடகியான பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

திரைப்படத்துறையில் சுமார் அரை  நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் இவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர், ஐந்து முறை தேசிய விருதுகள், பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள், எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.