Home உலகம் “உலகத் தரம் மிக்க கலாச்சார மையம் யாழ் நகரில்” – அடிக்கல் நாட்டு விழாவில் மோடி...

“உலகத் தரம் மிக்க கலாச்சார மையம் யாழ் நகரில்” – அடிக்கல் நாட்டு விழாவில் மோடி உரை

552
0
SHARE
Ad

PM-Modi-laying-the-foundation-stone-for-Jaffna-Cultural-Centre-1யாழ்ப்பாணம்,  மார்ச் 16 – இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ் நகரில் கடந்த சனிக்கிழமை தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:–

“யாழ்ப்பாணம் வந்து உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நகருக்கு வந்த போது எனக்கு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகிறது.”

PM-Modi-laying-the-foundation-stone-for-Jaffna-Cultural-Centre-2“இந்தியாவும் இலங்கையும் கலாச்சார ரீதியில் ஒன்றுபட்டு உள்ளன. யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கான நிர்மாணப் பணிகளை தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கலாசார மையம் புராதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விஷயங்களை அடையாளப் படுத்தப் போகிறது.

#TamilSchoolmychoice

உலகத் தரம் வாய்ந்த கலாச்சார மையத்தை கட்டிக்கொடுக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். எடுத்துக் கொண்ட பணிகளை எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாக செய்து முடிப்போம்”

அழிவுக்குப் பின்னர் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண நூலகம் குறித்து பேசிய மோடி புத்தகங்கள் நிறைந்துள்ள நூலகம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இடம் ஆகும் என்றும் கூறினார்.

Modi-laying-the-foundation-stone-for-Jaffna-Cultural-Centre-6“யாழ்ப்பாணம் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டு உள்ளது. இங்குள்ள மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து இருக்கிறார்கள்.  இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டும் அல்ல. இரு நாடுகளுக்கும் வரலாற்று ரீதியிலான உறவுகள் உள்ளன”.

“அமைதியும் ஒன்றுமையும் நிலவி இலங்கை முன்னேற்றம் காண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து தரப்பு மக்களும் உரிய மரியாதையுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். இதைத்தான் நான் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும் போதும் குறிப்பிட்டேன்” என்றும் மோடி தனதுரையில் குறிப்பிட்டார்.