Home வாழ் நலம் இதய நோய்களைத் தடுத்து இளமையைத் தக்க வைக்கும் நெல்லிக்காய்!

இதய நோய்களைத் தடுத்து இளமையைத் தக்க வைக்கும் நெல்லிக்காய்!

565
0
SHARE
Ad

amlaமார்ச் 27 – நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

மேலும் நெல்லிக்காயில் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மற்றும் வைட்டமின்களான பி, சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. தற்போது நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகளை பார்போம்.

இதய நோயைத் தடுக்கும்:

#TamilSchoolmychoice

நெல்லிக்காய் இரத்த கொழுப்பின் அளவை சீராக பராமரிக்கும். அதிலும் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் எனும் வேதி பொருள், கெட்ட கொழுப்புக்களை கரைத்து, இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிந்து, அடைப்பை ஏற்படுத்தி, அதனால் இதயம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

aaaநீரிழிவைக் கட்டுப்படுத்தும்:

நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்பட்டு, நீரிழிவை சரியான அளவில் சுரக்க உதவும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இளமையைத் தக்க வைக்கும்:

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இவை செல்களின் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாதது. அதுமட்டுமின்றி, வைட்டமின் ஏ சருமத்தின் இளமையைத் தக்க வைக்கும். அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

amla,புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும்:

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனும் அமிலம் வளமாக நிறைந்திருப்பதால், இவை உடலில் உள்ள செல்கள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்த்துப் போராடும். மேலும் நெல்லிக்காய் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும்.

கல்லீரலை பாதுகாக்கும்:

தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கல்லீரலுக்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும். எனவே இரவில் மது அருந்தினால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் மது குடிப்பதால் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும்.