Home நாடு அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா? – அடுத்த புதன்கிழமை முடிவு!

அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா? – அடுத்த புதன்கிழமை முடிவு!

512
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், மார்ச் 27 – ஓரினப்புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சுங்கை பூலோ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு அவரின் குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனு மீதான முடிவு தயாராகிவிட்டது.

அன்வாருக்கு மன்னிப்பு வழங்கப்படுமா? என்பதற்கான முடிவு அடுத்த வாரம் புதன்கிழமை, சிறப்பு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று அன்வாரின் வழக்கறிஞர்களுள் ஒருவரான என்.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் துறை சட்டப் பிரிவின் தலைமை இயக்குனரும், அரச மன்னிப்புக் குழுவின் உறுப்பினருமான டத்தோ நூர்சியா அர்சாட், அன்வாரின் வழக்கறிஞர்களுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அரச மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில் அன்வார் விரைவில் விடுதலை செய்யப்படுவார். நிராகரிக்கப்படும் பட்சத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை தொடர்வதோடு, பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியையும் இழப்பார்.