Home உலகம் நாகாலாந்து முதல்வராக நெய்பு ரியோ தேர்வு

நாகாலாந்து முதல்வராக நெய்பு ரியோ தேர்வு

738
0
SHARE
Ad

nagalandகோஹிமா, மார்ச்.4- நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக, தொடர்ந்து, மூன்றாவது முறையாக, நெய்பு ரியோ நாளை (செவ்வாய் கிழமை) பொறுப்பேற்கிறார்.

நாகாலாந்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 60 இடங்களுக்கு நடந்த தேர்தலில், நாகா மக்கள் முன்னணி, 40 இடங்களில் வெற்றி பெற்றது.

நேற்று நடை பெற்ற கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், நாகா மக்கள் முன்னணி கட்சித் தலைவர் ரியோ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து, ரியோ, நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். ராஜ்பவனில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், கவர்னர், நிகில்குமார், முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ரியோ மற்றும், 11 கேபினட் அமைச்சர்களுக்கு, பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.