Home கலை உலகம் விஜய் படத்தில் தேசிய விருது பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடல்!

விஜய் படத்தில் தேசிய விருது பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணன் பாடல்!

736
0
SHARE
Ad

vijay59சென்னை, ஏப்ரல் 8 – ’சைவம்’ படத்தில் ‘அழகே அழகே’ எனும் பாடல் பாடிய உத்தரா உன்னிகிருஷ்ணன் சிறந்த பாடகிக்காக தேசிய விருதை  பெற்றார். தற்போது உத்தரா, இளைய தளபதி விஜய்யின் 59-வது படத்தில் பாடல் பாடவிருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க உள்ள படம் ‘விஜய் 59’. இன்னமும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

முன்னதாக ‘சைவம்’ படத்தின் மூலம் உன்னிகிருஷ்ணன் மகள் உத்தராவை பாடகியாக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்குமார், இப்படத்திலும் உத்தராவிற்கு பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். அட்லீ என்பதால் குடும்பம் சார்ந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் தற்போது ஒரு குழந்தை பாடலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து சமீபத்தில் உத்தரா பேசுகையில், “நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவர் படத்தில் பாடவிருப்பது மிகவும் சந்தோசமாகவும், உர்ச்சாகமாகவும் உள்ளது. மேலும் ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் ஒரு பாடல் பாடவிருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.