ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் பெர்லின் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
“பூமியில் அரசனாக இருக்கும் சிங்கமும் (இந்திய சின்னம்), வானில் அரசனாக திகழும் கழுகும் (ஜெர்மனியின் சின்னம்) வலுவான கூட்டாளியாக இருக்க வேண்டும் என நம்புகிறேன். இரு நாடுகள் இடையேயான உறவு புதிய உச்சத்தை தொட வேண்டும்”.
“இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கி விரைவில் நிறைவேற பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன்”.
“தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை நாம் தனிமை படுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் நிரந்தர இடம் கோரும் உரிமை ஜெர்மனிக்கும், இந்தியாவுக்கும் உள்ளது என நான் நம்புகிறேன். நமது உறுப்பினர் அந்தஸ்து உலகுக்கே பயனுள்ளதாக இருக்கும்” என மோடி கூறினார்.