Home நாடு எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நஜிப்புக்கு எதிராக சதியா? – மகாதீர் மறுப்பு

எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நஜிப்புக்கு எதிராக சதியா? – மகாதீர் மறுப்பு

384
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை பதவி விலகச் செய்ய தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கூறிய ஜசெக கட்சிக்கு மகாதீர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Mahathir

இது குறித்து மகாதீர் கூறுகையில், “நஜிப்பை பதவியிலிருந்து இறக்க நான் யாருடனும் இணைந்து பணியாற்றவில்லை. குறிப்பாக எதிர்கட்சிகள்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை ஜசெக தலைவர் லிம் கிட் சியாங் வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவைக் காப்பாற்ற மகாதீர் விரும்பும் பட்சத்தில் பழைய பிரச்சனைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, மகாதீர் நேற்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அம்னோவிற்குள் தான் பிரச்சனை. 13வது பொதுத்தேர்தலின் போது ஆயிரக்கணக்கான அம்னோ உறுப்பினர்கள் நஜிப்பை ஆதரித்து ‘ஐ லவ் பிஎம்’, ‘ஐஎம்4யு’ என்றெல்லாம் பதாகைகளை வைத்து தங்களது  ஆதரவை வெளிப்படுத்தினர். ஆனால் தேர்தலுக்குப் பின் அவரது செயல்பாடுகள் பாக் லாவை (துன் அப்துல்லா அகமட் படாவி) விட மோசமாக இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

“பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று நான் மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. பெரும்பாலான அம்னோ உறுப்பினர்களின் கருத்தும் அது தான்” என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.