Home அரசியல் மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி உண்ணாவிரதம்

மலேசிய இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி உண்ணாவிரதம்

885
0
SHARE
Ad

Hindrafகோலாலம்பூர், மார்ச் 5 – மலேசிய இந்தியர்களுக்கு சமுதாயத்தில் தொடர்ந்து நிலவி வரும் பல பிரச்சனைகளுக்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டி ஹிண்ட்ராப் இயக்கத் தலைவர் பி.வேதமூர்த்தி அவர்கள் வருகிற மார்ச் 10 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக அவ்வியக்கத்தின் சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப்போராட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்த போராட்டம் மலேசிய இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ராவாங், கம்போங் பெங்காலியில் அமைந்துள்ள அகோர வீரபத்திரர் சங்கிலி கறுப்பர் ஆலயத்தில் காலை  7 மணி முதல் தொடங்கப்படும் என்று ஹிண்ட்ராப் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.