Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையுள்ளது – கமருதின்

தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையுள்ளது – கமருதின்

723
0
SHARE
Ad

download (1)

கோலாலம்பூர், மார்ச் 5- தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படும் கருத்தை ஆணையம் உறுதியாக மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளிலும்,முடிவுகளிலும் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வு அறிக்கையையும் அது வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகளில் மக்களுக்கு எந்த அளவிற்கு நம்பிக்கை உள்ளது என்பதை அறிந்து கொள்ள ‘தேசிய பேராசிரியர் மன்றம்’ நடத்திய ஆய்வு ஒன்றில் மலாய்க்காரர்களில் 87.9 விழுக்காட்டினரும், சீனர்களில் 75.7 விழுக்காட்டினரும்,  இந்தியர்களில் 85.1 விழுக்காட்டினரும் , சாபாக்காரர்களில் 92.2 விழுக்காட்டினரும் , சரவாக்கியர்களில் 85.1 விழுக்காட்டினரும் தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகத்  தெரிவித்து உள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும் இது பற்றி தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கமருதின் முகம்மட் பாரியா நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,”தேர்தல் ஆணையம் வருகிற 13வது பொதுத்தேர்தலை எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி நடத்துமா? என்ற கருத்துக்கணிப்பில்,  மலாய்க்காரர்களில் 76.2 விழுக்காட்டினரும் சீனர்களில் 59 விழுக்காட்டினரும் இந்தியர்களில் 81.9 விழுக்காட்டினரும் சாபாக்காரர்களில் 81.9 விழுக்காட்டினரும் சரவாக்கியரில் 71.1 விழுக்காட்டினரும் ‘நிச்சயம் நடத்தும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என்றார்.

தேர்தல் ஆணையம் அரசின் தலையீடு இன்றி சுதந்திரமாகச்  செயல்படுகிறதா?

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் அலுவலகம் சார்பாக  கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்து கொள்ள வந்த கமருதினிடம் கல்விமான் ஒங் கியான் மிங்கும் மற்றும்  புக்கிட் பெண்டேராவின் எம்பி லியு சின் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை மக்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறார்களா? தேர்தல் ஆணையம் அரசின் தலையீடு இன்றி சுதந்திரமாகச் செயல்படுகிறதா? போன்ற கேள்விகளை  எழுப்பியதை அடுத்து இந்த கருத்துக்கணிப்பின் ஆய்வு முடிவுகளை அவர் முன் வைத்தார்.