கோலாலம்பூர், மே 18 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், தற்போது பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் பக்கமும் திரும்பியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு இடையே உள்ள உரசல்கள் காரணமாக, லிம் குவான் எங்கின் ஆட்சிமுறை பகைமை மற்றும் இன பாகுபாட்டிற்கு வழி வகுக்கின்றது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
“பாருங்கள், இந்த நாடு 60 வருடங்களாக நிலையாக இருந்தது. அதனால் நாடு நன்றாக முன்னேறியது. ஆனால் தற்போது வெவ்வேறு அரசாங்கங்கள், வெவ்வேறு மாநிலங்களில் செயல்படுகின்றன.”
“உங்களுக்கு இந்த பகைமை உணர்வு உள்ளது மற்றும் அதனால் நீங்கள் இனவாத விசயங்களை செய்யத் தொடங்கியிருக்கிறீர்கள். அதனால் இந்த நாட்டிற்கு நீங்கள் எதுவும் நல்லது செய்யவில்லை”
“எனவே இரண்டு பேருமே ராஜினாமா செய்ய வேண்டும். மலேசியாவின் வரலாற்றையும், இந்த நாட்டை நன்றாகப் புரிந்து கொண்டவரையும் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்” என புத்ராஜெயாவில் நடைபெற்ற புத்தக வெளியீடு ஒன்றில் மகாதீர் தெரிவித்துள்ளார்.