தான் ஒரு பெரிய நட்சத்திர நடிகர் என்று நினைக்காமல், பெரிய இயக்குனர்கள் முதல் அறிமுக இயக்குனர்கள் வரை அவர்களின் திறமையை பாராட்டும் மனப்பான்மை கொண்டவர் இளையதளபதி விஜய்.
அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ‘காஞ்சனா’ 2 படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தை சிறப்பாக எடுத்து, நடித்திருந்த ராகவா லாரன்சை நேரில் அழைத்து பாராட்டினார்.
தற்போது, அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தையும் பார்த்துவிட்டு இந்த படத்தை சிறப்பாக இயக்கிய இயக்குனர் அஜய் ஞா முத்துவை பாராட்டினர்.
தற்போது, சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்துபோன விஜய், சூர்யாவை நேரில் அழைத்து அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.