Home கலை உலகம் ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருக்கும் ரஜினி!

ஜெயலலிதாவைச் சந்திக்கக் காத்திருக்கும் ரஜினி!

536
0
SHARE
Ad

rajinikanth-old-age-wallpaper-586x529

சென்னை, ஜூன்10- காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடும் என்பது கண்கூடான உண்மை. இது ரஜினிகாந்த் விசயத்திலும் மெத்தச் சரியானது!

ஒரு காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக வந்தால், ஆண்டவனாலும் அதைக் காப்பாற்ற முடியாது என்று சொன்னவர் தான் இந்த ரஜினி.

#TamilSchoolmychoice

ஆனால், காலம் அவரை ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு வந்து வரிசையில் அமர்ந்து சரத்குமாருடன் தம்படமும் எடுத்துக் கொள்ள வைத்தது.

அதுமட்டுமில்லாமல், அவரது தயவு வேண்டி ரஜினியைக் காக்கவும் வைத்திருக்கிறது. இதைத் தான் காலத்தின் கட்டாயம் என்பார்கள்.

லிங்கா பட விநியோகஸ்தர் பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் ரஜினி.ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.

இதற்கிடையே கலைஞரின் பேரன் அருள்நிதியின் திருமணத்தில் கலந்து கொண்டு கலைஞரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார். எனவே, கண்டிப்பாக ஜெயலலிதாவைச் சந்திக்க அனுமதி கிடைக்காது என்கிறார்கள்.

இதனால் ரஜினி சற்று வருத்தத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பா.ரஞ்சித்தின் படத்தில் நடிப்பதற்கு முன் லிங்கா பிரச்சனையைத் தீர்த்துவிட்டால் நிம்மதியாக நடிக்கலாம் என்பது ரஜினியின் எண்ணம்.