Home இந்தியா டில்லியைக் கடும் புழுதிப் புயல் தாக்கியது!

டில்லியைக் கடும் புழுதிப் புயல் தாக்கியது!

564
0
SHARE
Ad

puzuthiபுதுடில்லி, ஜூன் 13- டில்லியில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரெனப் புழுதிப் புயல் வீசியது.

படு வேகமாகச் சுழன்றடித்த காற்றானது, சாலையோரம் கிடந்த மண்ணையும் புழுதியையும் வாரித் தெளித்ததால் வாகனங்களில் சென்றவர்கள் கண்களில் தூசு விழுந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

விபத்துகள் ஏற்படும்  அபாயம் உருவானது. இதைத் தொடர்ந்து 3 மணியளவில் மிதமான மழை பெய்ததால் புழுதியடங்கி டெல்லிவாசிகள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சுவிட்டனர்.

#TamilSchoolmychoice

இதனால் வெயிலின் தாக்கமும் சற்றுக் குறைந்தது.