Home உலகம் தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது!

தென் கொரியாவில் மெர்ஸ் நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது!

564
0
SHARE
Ad

TamilDailyNews_7686992883683சியோல், ஜூன் 13- சென்ற மாதம் 20 ஆம் தேதி சவுதி அரேபியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டுத் தென்கொரியாவுக்குத் திரும்பிய 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூலமாகப் பலருக்கும் மெர்ஸ் என்ற நோய் பரவியது.

இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மொத்தம் 138 பேர் எனக் கண்டறியப்பட்டது. இதில்13 பேர் இந்நோய்க்குப் பலியானார்கள்.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்நோய் தாக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

#TamilSchoolmychoice

அவர்கள் தனி வார்டில் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று இன்னும் ஒருவர் பலியானார். அதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

ஆகவே,தொடர்ந்து அந்நாடு முழுவதும் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன