Home நாடு “என் மீதான பதில் தாக்குதல்களைக் கொண்டுவாருங்கள்” – சைகை மூலம் ஜோகூர் இளவரசர் பதில்!

“என் மீதான பதில் தாக்குதல்களைக் கொண்டுவாருங்கள்” – சைகை மூலம் ஜோகூர் இளவரசர் பதில்!

517
0
SHARE
Ad

ஜோகூர்பாரு, ஜூன் 13 – ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு (படம்) எதிராக கலாச்சாரச் சுற்றுலாத் துறை அமைச்சர், நஸ்ரி அசிஸ் “ஒதுங்கியிருங்கள்! இல்லாவிட்டால் நாங்கள் பதிலடி தருவோம்” என்ற தொனியில் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, துங்கு இஸ்மாயிலும் பதில் கொடுத்துள்ளார்.

Tunku-Ismail Johor Crown Princess

ஆனால், அந்தப் பதில் வாய் மூலம் அல்ல, சைகை மூலம், நவீன தொழில்நுட்பத்தின் வடிவத்தில் கொடுத்துள்ளார் துங்கு மக்கோத்தா என அழைக்கப்படும் பட்டத்து இளவரசர்.

#TamilSchoolmychoice

துங்கு இஸ்மாயில் தலைவராக இருக்கும் ஜோகூர் காற்பந்து சங்கத்தின் “ஜோகூர் சவுத்தர்ன் டைகர்ஸ்” (Johor Southern Tigers Facebook) என்ற பேஸ்புக் பக்கத்தில் அவரது காணொளி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது கரங்களின் சைகைகள் மூலம் “கொண்டு வாருங்கள்” எனக் கூறுகின்றார் துங்கு இஸ்மாயில்.

உங்களைப் பற்றியும் நாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என்ற நஸ்ரியின் எச்சரிக்கைக்குப் பதில் கூறுவதைப் போல “கொண்டு வாருங்கள்” என துங்கு இஸ்மாயில் பதில் கூறுவதுபோல் இந்தக் காணொளி அமைந்துள்ளது.

17 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த காணொளி ஜோகூர் காற்பந்து சங்கத்தின் சின்னத்தைக் காட்டுவதோடு, புலியின் சீற்றக் குரலையும் பதிவு செய்திருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து இந்தக் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்திற்கு விருப்புகளும், கருத்துப் பரிமாற்றங்களும் பெருகி வருகின்றன.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயிலின் அந்தக் காணொளி பதிவைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-

https://www.facebook.com/johorsoutherntigers.com.my?fref=ts