Home இந்தியா மாயமான டோர்னியர் விமானக் கருப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞை கண்டுபிடிப்பு!

மாயமான டோர்னியர் விமானக் கருப்புப் பெட்டியில் இருந்து சமிக்ஞை கண்டுபிடிப்பு!

433
0
SHARE
Ad

submarine under water three

சென்னை, ஜூன்13- இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம், நான்கு நாட்களுக்கு முன்பு, காரைக்கால் அருகே திடீரென மாயமாய் மறைந்து போனது.

இந்த விமானம் எங்கு விழுந்திருக்கும் என்று தெரியாமல் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல்படை எனப் பல பிரிவினரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், விமானக் கருப்புப் பெட்டியில் இருந்து இன்று சமிக்ஞை (சிக்னல்) வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடல்படையின் நீர்மூழ்கிக் கப்பல், இந்தச் சமிக்ஞையைக்  கண்டுபிடித்துள்ளது.

இதனால், கூடுதலாக நீர்மூழ்கிக் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.