Home இந்தியா டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் மூவருக்கும் இன்று அஞ்சலி!

டோர்னியர் விமான விபத்தில் உயிரிழந்த விமானிகள் மூவருக்கும் இன்று அஞ்சலி!

651
0
SHARE
Ad

28சென்னை, ஆகஸ்ட் 11- இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் கடலுக்குள் விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த வித்யாசாகர் (பைலட்), எம்.கே.சோனி (நேவிகேட்டர்), சுபாஷ் சுரேஷ் (துணை பைலட்) ஆகிய மூவருக்கும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள கடலோரக் காவல்படை விமான நிலைய வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

3 விமானிகளுக்கும் முப்படை வீரர்கள் அரச மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் உயிரிழந்த விமானிகளின் மனைவிகள் ,குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானிகளின் அகால மரணத்தை எண்ணிக் கண்ணீர் சிந்தினர்.

#TamilSchoolmychoice

விமான நிலைய அதிகாரிகளும் மூவரின் புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.