Home இந்தியா டோர்னியர் விமானம் குரல் பதிவுக்கருவி பழுது: விபத்திற்கான காரணம் அறிவதில் சிக்கல்!

டோர்னியர் விமானம் குரல் பதிவுக்கருவி பழுது: விபத்திற்கான காரணம் அறிவதில் சிக்கல்!

580
0
SHARE
Ad

07-1436275353-coast-guard-dornier-aircrafசென்னை – இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் மூன்று விமானிகளுடன் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தமிழ்நாடு பிச்சாவரம் அருகே கடலில் விழுந்து மூழ்கியது.

கிட்டத்தட்ட 33 நாட்கள் தீவிரத் தேடுதலுக்குப் பின், 1500 அடி ஆழத்திலிருந்து விமானத்தின் கருப்புப் பெட்டி, விமானிகள் அறைப் பேச்சுக் கருவியான ‘காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்’ மற்றும் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டன. அதன்பின்பு மூன்று விமானிகளும் எலும்பாக மீட்கப்பட்டனர்.

இந்த விமான விபத்திற்கான காரணம் அறிய கருப்பு பெட்டி அதைத் தயாரித்த அமெரிக்க நிறுவனத்திற்கும், ‘காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்’ கருவி அதைத் தயாரித்த ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டன.

#TamilSchoolmychoice

சில நாள் ஆய்வுக்குப் பின் அமெரிக்க நிறுவனம் தெளிவான முடிவுகள் இன்றிக் கருப்புப் பெட்டியைச் சென்னைக்கு அனுப்பி வைத்தது.

பின்னர் அந்தக் கருப்புப் பெட்டி பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு இரவு பகலாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம், விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது விரைவில் வெளி வரும்.

இந்நிலையில், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரைத் தயாரித்த ஐதராபாத்தில் உள்ள மத்திய மின்னணு நிறுவனம், “கருவியில் இருந்த சர்க்யூட்கள் பழுதடைந்துவிட்டதால் அதிலிருந்த தகவல்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

இதனால், கடைசி நேரத்தில் விமானத்தில் விமானிகள் என்ன பேசினார்கள் என்பதை அறிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கருப்புப் பெட்டியாவது கை கொடுக்குமா எனத் தெரியவில்லை.