Home கலை உலகம் புகார் கூறிய டி.ராஜேந்தருக்கு நயன்தாரா பதிலடி!

புகார் கூறிய டி.ராஜேந்தருக்கு நயன்தாரா பதிலடி!

659
0
SHARE
Ad

01-1441112231-idhu-namma-aalu-600சென்னை – வாலு பட வெற்றிக்குப் பின் சிம்பு நடித்துக் கிடப்பில் போடப்பட்டுள்ள படங்கள் தூசி தட்டி மீண்டும்  புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன.

சிம்பு- ஹன்சிகா நடித்த ‘வேட்டை மன்னன்’ படத்தை முடித்து வெளியிடும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

அதே போல், சிம்பு- நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு பட வேலைகளும் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நயன்தாரா 10 நாள் தேதி( கால்ஷீட்) கொடுத்து நடித்துக் கொடுத்தால் படத்தை முடித்து விடலாம்.

ஆனால், நயன்தாரா நடித்துக் கொடுக்க மறுப்பதாகவும் மீதிப் பணம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பதாகவும் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் புகார்கொடுத்தார்.

இந்தப் புகாருக்கு நயன்தாரா பதில் தெரிவித்திருக்கிறார்.

“நியாயமாகப் பார்த்தால் என்னுடைய தேதிகளை வீணடித்ததற்காக டி.ராஜேந்தர் மீது நான்தான் புகார் தந்திருக்க வேண்டும். நான் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காகப் பல முறை தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிட்டேன்.

ஆனால் ஒருமுறை கூட அவற்றைச் சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது அவர்கள் கேட்கும் தேதியில் நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் என்னால் வர முடியாது என்று சொன்னேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அது அவர்களுடைய தவறு!” எனக் கூறியுள்ளார்.

அப்படி நயன்தாரா நடிக்க வேண்டுமானால் அவர் கொடுக்கும் தேதி வரை காத்திருக்க வேண்டியது தான்! சிம்புவுக்கும் டி.ராஜேந்தருக்கும் வேறு வழியில்லை.