Home Featured நாடு பெர்சே 4 சிறந்த புகைப்படங்களை அனுப்புங்கள் – பரிசுகளை வெல்லுங்கள்!

பெர்சே 4 சிறந்த புகைப்படங்களை அனுப்புங்கள் – பரிசுகளை வெல்லுங்கள்!

661
0
SHARE
Ad

bersihகோலாலம்பூர் – பெர்சே 4.0 பேரணியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம் ஒன்றிற்கு 1000 ரிங்கிட் வரை பரிசு வழங்கவிருப்பதாக பிகேஆர் அறிவித்துள்ளது.

‘பெர்சே 4 புகைப்படப் போட்டி’ என்ற பெயரில் நடத்தப்படவுள்ள இந்தப் போட்டியில், பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

#TamilSchoolmychoice

பெர்சே 4 பேரணியின் உண்மையான நிலவரம் என்னவென்பதை காட்டவும், தேசிய முன்னணி அரசாங்கம் பேரணி குறித்து ஏற்படுத்தியுள்ள எதிர்மறை கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கவும் இப்போட்டி நடத்தப்படுவதாக பிகேஆர் வியூக இயக்குநர் சிம் திஸ் திசின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் 6-ம் தேதிக்குள் போட்டியில் பங்கேற்பவர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை  pertandinganbersih@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘Demi Rakyat Facebook page’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்படும். செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 16 வரை 10 நாட்கள் மக்களின் தேர்வுக்காக அப்புகைப்படங்கள் வைக்கப்படும். மக்களிடம் அதிக வரவேற்பினைப் பெறும் (லைக்ஸ்) புகைப்படத்திற்கு முதல் பரிசாக 1000 ரிங்கிட் வழங்கப்படும். இரண்டாவதாகத் தேர்வாகும் புகைப்படத்திற்கு 300 ரிங்கிட்டும், மூன்றாவதாகத் தேர்வாகும் புகைப்படத்திற்கு 200 ரிங்கிட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.