Home இந்தியா டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது!

643
0
SHARE
Ad

3029-15543-sania_dohaபுதுடில்லி, ஆகஸ்ட் 11- டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகள் புரிந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சாவுக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ்  காந்தி கேல் ரத்னா விருது அளிக்க, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

சார்னியா மிர்சா 2014-ஆம் ஆண்டு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிரார்த்தனா தாம்பேருடன் இணைந்து பெண்கள் இரட்டையர் டென்னிசில் வெண்கலப் பதக்கமும், கலப்பு இரட்டையரில் தங்கமும் வென்றார்.

அதேபோல்  ப்ருனோ சோரசுடன் இணைந்து அமெரிக்க ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் வென்றார்.

#TamilSchoolmychoice

அண்மையில் நடந்த விம்பிள்டன் டென்னிசில் மகளிர் இரட்டையர் பட்டத்தையும் சானியா மிர்சா வென்றார்.

2004-ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2006-ஆம் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்ற சானியா மிர்சாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைப்பது தங்கக் கிரீடத்தில் வைரத்தைப் பதிப்பது போல் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதாகும்.