Home Featured இந்தியா சானியா மிர்சா உலக சாதனை – இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்!

சானியா மிர்சா உலக சாதனை – இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்!

860
0
SHARE
Ad

sania-hingisசிட்னி – 22 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜிகி பெர்ணான்டஸ், பெலாரசின் நடாஷா ஜோடி அனைத்துலக டென்னிஸ் போட்டியில் நிகழ்த்திய தொடர்ச்சியான 28 வெற்றிகள் என்ற சாதனையை, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி நேற்று தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சிட்னியில் நடந்த டென்னிஸ் தொடரில் பங்கேற்ற இந்த ஜோடி, அரையிறுதியில் கஜகஸ்தானின் ஷிவ்டோவா, ருமேனியாவின் ஒலாரு ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை தீர்மானிக்கும் ‘சூப்பர் டைபிரேக்கர்’ சுற்றில் அபாரமாக ஆடிய சானியா ஜோடி 10-8 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அனைத்துலக டென்னிஸ் அரங்கில், தொடர்ந்து அதிக வெற்றிகள் (29) பெற்ற பெண்கள் இரட்டையர் ஜோடி என்ற வரலாறு படைத்துள்ளது.